தனியார் பஸ் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாக அறிவிப்பு

தனியார் பஸ் ஒன்றியத்தினர் நாடளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தனியார் பஸ் உரிமையார்கள் சங்கத்தினருடன் இடம்பெற்றது. பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக உரிய தீர்வினை பெற்று கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் இதற்கான முடிவினை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி பெற்று தருவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண் டும் எனவும் ஜனாதிபதி இதன்போது கேட்டுகொண்டுள்ளார்.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு தொடக்கம் முன்னெடுக்கப்பட இருந்த தனியார் பேருந்து சேவை பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பரியந்த குறிப்பிட்டார்.

இந்த பணி பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் அசௌ கரியங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்

Related Posts