ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ள வரி அதிகரிப்பு,டொலரின் அதிகரிப்பு காரணமாக தமது தொழிற்துறை பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் பஸ் கட்டணங்களை அதிகரிக்கும் முடிவுக்கு வந்தததாக இந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பாக நிதி அமைச்சிற்கும்,போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் அறிவித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.