தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிரோஷா தற்கொலை

தெழுங்கு தொலைக்காட்சியில் பிரபல நடிகையாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்த நிரோஷா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

nerosha

ஜெமினி மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளாரக பணியாற்றி வந்த நிரோஷா, இன்று (மார்ச் 16) அதிகாலை, தான் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

23 வயதாகும் நிரோஷா, செய்தி சேனல் ஒன்றில் நிருபராக பணியாற்றிக்கொண்டே, ஜெமினி மீயூசிக் சேனலில், நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில், அவரது தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள தனது காதலர் ரித்விக்குடன், skype ப்பில் உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டிருந்த நிரோஷா, திடீரென்று தூக்குபோட்டுக்கொண்டதாகவும், கனடாவில் இருந்து ரித்விக், இந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்துள்ளனர்.

Related Posts