தனியார் துறை ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடியாது; 50 சதவீத அடிப்படைச் சம்பளத்தை செலுத்தவேண்டும் என உடன்படிக்கை!!

கோவிட் -19 தொற்று நோய் காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில் எந்தவொரு தனியார் துறை ஊழியர்களும் வேலையிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் பணியில் இருக்கும் காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் சம்பளத்தையும் செலுத்த வேண்டும் என்றும், அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும் என்றும் உடன்படிக்கை செய்யப்பட்டது.

திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் இலங்கை முதலாளிகள் சம்மேளனத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளால் நியமிக்கப்பட்ட சிறப்பு முத்தரப்பு பணிக்குழுவின் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் தனியார் துறையையும் அதன் ஊழியர்களையும் பாதிக்காத பல சிறப்பு முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சு அறிவித்தது.

அடுத்த வாரம் முதல் சுகாதாரத் துறையின் ஆலோசனையுடன் நாட்டின் அனைத்து தனியார் நிறுவனங்களையும் திறந்து சேவைகளை வழங்கல் மற்றும் நாட்டின் பணியாளர்களை கோரோனா வைரஸிலிருந்து பாதுகாத்தல் ஆகியவையும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் பணியில் இருக்கும் காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் சம்பளத்தையும் செலுத்த வேண்டும் என்றும், அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும் என்றும் உடன்படிக்கை செய்யப்பட்டது.

அத்துடன், ஊழியர் சேமலாப நிதி (ஈபிஎப்), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ஈரிஎவ்) ஆகியவற்றையும் முறையாக செலுத்தப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கை மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாத இறுதியில் இந்த குழு மீண்டும் கூடி நாட்டின் நிலமைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts