தனியார் காணிகளைக் கையகப்படுத்த ஜனாதிபதி உத்தரவு!

விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ள தனியார் காணிகளை அரசமயப்படுத்தி அவற்றில் விவசாயத்தை மேற்கொள்ள கூடிய வகையில் தற்போது இருக்கின்ற சட்டத்தின் கீழ் விசேட அரச வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாரிய அளவிலான தனியார் காணிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்து கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக சிறிசேன தெரிவித்தார்.

உரிமையாளர்களுக்கு முதலில் உத்தரவிடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன அதனை மீறும் நபர்களின் தனியார் காணிகளே அரச மயப்படுத்தப்படும் என்று கூறினார்.

Related Posts