தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது கொடூரத் தாக்குதல்!

யாழில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை இனந்தெரியாத குழுவொன்று கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் உடுவில் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

72 வயதான பொன்மலர் என்ற மூதாட்டியே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கியுள்ளதாகவும், கொள்ளையிடும் நோக்கில் மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை எனவும் உடுவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts