தனிமையில் வசித்த வயோதிபப்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

dead-footயாழ். நீர்வேலி மேற்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் பாவனையற்ற கிணறென்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கனகம்மா (வயது 72) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இவர் அதிகாலை 4 மணியளவில் தினமும் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று வருதை வழமையாகக் கொண்டுள்ளார்.

நேற்று அதிகாலை கோயிலுக்கு சென்ற இவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததை தொடர்ந்து உறவினர்கள் இவரைத் தேடி வந்த நிலையிலேயே இவரது சடலம் கிணற்றில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Posts