ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் பயணிப்பவர்களுக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை!! கொக்குவிலில் 5பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் பயணிப்பவர்கள், அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்து வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை இணைந்து, கொக்குவில் கே.கே.எஸ் வீதியில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வீதியில் நடமாடுவோர் மீது அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 40 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts