தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களைக் கண்காணிப்பதற்கான பாதுகாப்பான கை வளையல் தொடர்பாக பிரதம அமைச்சர் அவர்கள் கவனஞ் செலுத்தியுள்ளார்

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்த முடியுமான உபகரணமொன்றைப் பன்னிபிட்டியவைச் சேர்ந்த அமில சமீர ரத்நாயக்க அவர்கள் உருவாக்கியுள்ளார்.

கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய தயாரிப்பு நேற்று (2020.04.17) பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு முன் வைக்கப்பட்டது.

கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்தை உயர்ந்த முடிவாக்கத்துடன் தயாரிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறும், இந்த தயாரிப்புக்கு காப்புரிமை அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வழிகாட்டலை வழங்குமாறும் ஏற்புடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய பிரதம அமைச்சர் அவர்கள், இந்த உபகரணத்தை இராணுவத் தளபதியின் கண்காணிப்புக்குச் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

Related Posts