தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!!

யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் பூம்புகாதர் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள பூம்புகார் கிராமத்தில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற 18 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.

Related Posts