யாழ்.குடாநாட்டில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்றுள்ளதாக புலன் விசாரணைகள் மூலம் அறிய முடிகின்றதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்துள்ளார்
யாழ்.பொலிஸ் தலமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழில் வலம்புரி மற்றும் தினமுரசு பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட வாய்மூல விசாரணைகளின் போது அவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்களைத் தாக்கியவர்களின் நோக்கத்தை புரியவில்லை எனக் கூறியுள்ளனர்.
அவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாடுகளை தீர விசாரணைக்கு உட்படுத்திய போது ஒரு உண்மை புலனாகின்றது.
சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள வீடுகளிலும் கடைகளிலும் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையின் போது தாக்குதல் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது.
இருந்தும் எமது விசாரணை முடியவில்லை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றேன். தாக்குதல் காரர்களைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.
தாக்கியவர்கள் தொடர்பில் முறைப்பட்டுக் காரர்களான ஊடகவியலாளர்கள் முழுமையான தகவலைத் தரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.