தனது ஆறு வயது பிள்ளையை ரயிலில் தள்ளி கொல்ல முற்பட்ட பெண்ணொருவர் கண்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கிய பயணித்த ரயிலிலேயே அவர் தனது பிள்ளையை தள்ளிவிட்டுள்ளார். எனினும் கண்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண் தப்பிச் சென்றதோடு பின்னர் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
37 வயதான இந்தப் பெண்ணுக்கு மேலும் இரண்டு பிள்ளைகள் இருப்பதோடு, தனது கடைசிக் குழந்தையே அவர் ரயிலில் தள்ளிவிட முற்பட்டுள்ளார்.
பொலிஸாரால் காப்பாற்றப்பட்ட பிள்ளை மற்றும் கைதான பெண்ணை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.