தனது வீட்டின் முகவரி கூட தெரியாத விஜய்!

சேவை வரி விலக்கு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், தன் இருப்பிட முகவரியைத் தவறாகத் தந்துள்ளார் விஜய்.

அந்த முகவரியில் இப்போது வசிப்பவர் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி ஆகும். சேவை வரி விலக்கு அளித்து சினிமாவைக் காப்பாற்றுங்கள் என்று சில தினங்களுக்கு முன் நடிகர் ஜோசப் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

vijay letter

இந்த இரு பக்க கடிதத்தில் அவருடை முகவரி என குறிப்பிடப்பட்டிருப்பது, ’86/86 ஸ்டேட் பேங்க் காலணி, மூன்றாவது தெரு, விருகம்பாக்கம், சென்னை – 92′ என உள்ளது. ஆனால் இந்த வீட்டில் விஜய் இப்போது வசிக்கவில்லை.

வீடு அவர் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரனுக்குச் சொந்தமானது என்றாலும், இப்போது அவர்கள் யாரும் அந்த வீட்டில் வசிக்கவில்லை. இசையமைப்பாளர் விஜய் ஆன்டனிக்கு அந்த வீட்டை விட்டுவிட்டார்கள். அவருடைய ஸ்டுடியோ கம் வீடாக இப்போது இருந்து வருகிறது.

சச்சின் படம் வெளியாவதற்கு முன்பே நீலாங்கரையில் கட்டியுள்ள புதிய வீட்டில்தான் விஜய் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவரது இரு திருமண மண்டபங்கள்தான் அவரது ரசிகர் மன்ற அலுவலகம் செயல்படும் முகவரி என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்பே தன் இருப்பிடத்தை மாற்றிவிட்ட ஜோசப் விஜய், பிரதமர் என்ற மிக உயர் பொறுப்பில் உள்ளவருக்கு எழுதிய கடிதத்தில் தவறான முகவரி இருப்பதைக் கூட கவனிக்கவில்லையா!

இவர் எல்லாம் அடுத்த சுப்பஸ்டாரா என ரசிகர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்

Related Posts