சினிமாவில் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் காட்டி வந்தவர் டி.ராஜேந்தர். அதோடு சண்டை காட்சிகளில், வாடா என் மச்சி வாழக்கா பச்சி -என்று அடுக்கு மொழி டயலாக் பேசிக்கொண்டே எதிரிகளை பந்தாடுவார். அந்த வகையில், தனக்கேன ஒரு தனி பாணியை வைத்து நடித்து வந்த டி.ராஜேந்தரின் ரசிகராக சில நடிகர்கள் நடித்துள்ளனர். ஜெயம்ரவிகூட ரோமியோ ஜூலியட் படத்தில் டி.ஆரின் ரசிகராகத்தான் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இதுவரை அஜித் ரசிகராக தனது படங்களில் நடித்து வந்த சிம்பு, தற்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் அஸ்வின் தாத்தாவாக நடிக்கும் வேடத்தில் படையப்பா ரஜினி ரசிகராக நடித்திருப்பவர், மதுரை மைக்கேலாக நடிக்கும் வேடத்தில் தனது தந்தை டி.ஆரின் ரசிகராகவே நடித்துள்ளார். அதனால்தான் அந்த கெட்டப்பில் தாடி வைத்து நடித்திருக்கும் அவர், தந்தை பாணியில் அடுக்குமொழியில் பொறி பறக்க டயலாக் பேசி நடித்துள்ளாராம். அதனால் மைக்கேல் கேரக்டர் திரையில் தோன்றும் காட்சிகளின்போது தியேட்டர்களில் விசில் பறக்கும் என்கிறார்கள்.