நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழீழத்தின் சமகால அரசியல் பற்றிய கருத்துரைகளும்இ கலந்துரையாடலும் எனும் நிகழ்வு கனடா றொரான்டோவில் 10.11.2015 அன்று பேராசிரியர் சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் வீடியோக் காணொளி மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.
இந் நிகழ்வில் கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தாயக மக்களிற்கான தீர்ப்பு புலம் பெயர் தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றும் , உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் எனவும் , இவ்வாறாக உலக நாடுகளின் அழுத்தங்கள் இலங்கை அரசு மீது ஏற்படுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்களாலேயே உலக நாடுகளிடம் தழுத்தத்தை கொண்டுவர முடியும் எனவும், உலகத்திலேயே யூத இனத்திற்கு அடுத்த படியாக புலம் பெயர் தமிழ் மக்களின் சக்தியே உள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் உருத்திரகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில் ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் சரிவர நடைமுறைப்படுத்துகிறதா? என்பதை கண்காணிக்க 15 பேர் கொண்ட சர்வதேச நீதிபதிகள் இ கலப்பு நீதிமன்றங்களில் பணியாற்றிய நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை நியமித்திருப்பதாகவும் அந்தக்குழு நாடு கடந்த அரசாங்கத்திற்கும், ஐ.நாவிற்கும் அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மக்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலுரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தந்தை செல்வா, தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் இவர்களைத் தொடர்ந்து எமது மக்கள் நேசிக்கும் ஒரே நபர் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே என தெரிவித்தார்.