தந்தை கொலைசெய்யப்பட்டதை அறியாது தந்தையை எழுப்ப 5 நாட்கள் முயற்சி செய்த பிள்ளைகள்!!

கணவரை பொல்லினால் தாக்கி கொலை செய்து தனது பிள்ளைகள் இரண்டினை வீட்டில் தனியாக விட்டு தப்பி சென்ற பெண்ணை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் பின்னர் குறித்த பெண் கணவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.

தமது தந்தை இறந்ததை அறியாத அவரின் பிள்ளைகள், தந்தையை எழுப்ப 5 நாட்களாக முயற்சி செய்துள்ளனர்.

அந்த 5 நாட்களும் குறித்த பிள்ளைகள், வீட்டில் இருந்த வாழைப்பழங்களை உண்டு பசியை போக்கியுள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர், கேகாலை – பெலிகல – ஹத்தனாகொட பிரதேசத்தை சேர்ந்த 47 வயது நபராவார்.

தமது தந்தையும் தாயும் சண்டை போட்டு கொண்டதாகவும், பின்னர் தாய் பொல்லினால் தந்தையை தாக்கியதாகவும் அந்த பிள்ளைகள் காவற்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.

பின்னர் கீழே விழுந்த தந்தை பேசவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

5 மற்றும் 3 வயதான அந்த பிள்ளைகள் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை காவற்துறையினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts