தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் கைது!

தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வயோதிபரின் மகளே அவரை கூட்டில் அடைத்து வைத்தமை தெரியவந்துள்ளது.

பின்னர் 73 வயதான அந்த முதியவர் மெனின்கின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பலகொல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts