தந்தையின் இறுதிச் சடங்கில் பற்கேற்க நளினிக்கு அனுமதி!

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு ராஜீவ் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

nalini114714

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்து வரும் நளினியின் தந்தை சங்கரநாரயணன் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளரான சங்கரநாராயணன் திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவானபுரத்தில் வசித்து வந்தார்.

அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு, இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று பரோலில் விடுவிக்கப்படுகிறார்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அவருக்கு விடுதலை அளிக்கப்படும் என வேலூர் சிறைத்துறை வட்டாரங்கள் கூறின.

Related Posts