தந்தையானார் பேஸ்புக் நிறுவுனர் மார்க்; உலகத்தை மாற்ற பல கோடிகள்!

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவுனர் மார்க் ஷகர்பெர்க் மற்றும் இவரது மனைவி பிரிஸ்சில்லா தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

facebook-Mark

அக்குழந்தைக்கு மெக்ஸ் என பெயர் சூட்டியுள்ளனர்.

தங்களது குழந்தையின் புகைப்படத்தை அவர்கள் ​பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உள்ள பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஷகர்பெர்க், பேஸ்புக் நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது இதன் மொத்த பெறுமதி 45 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகளுக்காக அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக மக்களின் மகிழ்ச்சிக்கும், சுகாதாரமான வாழ்க்கைக்கும் இந்த பணத்தை வழங்க இருப்பதாக மார்க் தெரிவித்துள்ளார்.

தனது மகள் மெக்ஸ் மற்றும் பிற குழந்தைகளுக்காக சிறந்த உலகை உருவாக்குவதற்கு தனது செல்வம் முழுவதையும் தருவதாக மார்க் ஷகர்பெர்க் உறுதி அளித்துள்ளார்.

தானும் பிரிஸ்சில்லாவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக மார்க் ஷகர்பெர்க் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts