தந்தைக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதிய 5 வயது சிறுமி

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரின் ஐந்து வயது மகள் கூகுள் நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஒரு லட்டர் எழுதியுள்ளார்.

google1

அதில் தனது தந்தையின் பிறந்தநாளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கும்படி அந்த சிறுமி எழுதியிருந்தார். சிறுமியின் கோரிக்கையை ஏற்ற கூகுள் நிறுவனத்தலைவர் சிறுமியின் தந்தைக்கு ஒருவாரம் விடுமுறை அளித்து அசத்தியுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

கூகுள் நிறுவனம் கலிபோர்னியாவில் உள்ள தலைமையிடத்தில் இருந்து இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வரும் புதன்கிழமை பிறந்தநாள். அவருடைய பிறந்தநாள் அன்று விடுமுறை அளிக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைவர் Daniel Shiplacoff அவர்களுக்கு அந்த சிறுமி தனது மழலை மொழியில் ஒரு லட்டர் எழுதியுள்ளார்.

அந்த லட்டரில் தனது தந்தைக்கு வரும் புதன்கிழமை பிறந்தநாள் என்றும், அன்றைய தினம் அவருக்கு விடுமுறை அளிக்கும்படியும் கேட்டிருந்தார். வழக்கமாக தனது தந்தை சனிக்கிழமைதான் விடுமுறையில் இருப்பார் என்றும், பிறந்த நாள் காரணமாக புதன்கிழமை விடுமுறை கேட்பதாகவும் அந்த சிறுமி எழுதியிருந்தார்.

அந்த சிறுமியின் மழலை மொழியை பார்த்து ஆச்சரியம் அடைந்த கூகுள் நிறுவனர் Daniel Shiplacoff , உடனடியாக அந்த சிறுமிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். உனது தந்தையின் எங்கள் நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுள் ஒருவர் என்றும், அதனால் அவருடைய பிறந்தநளை கொண்டாட ஒருவாரம் நான் விடுமுறை அளிக்கிறேன் என்றும் எழுதியிருந்தார்.

இந்த இரண்டு கடிதங்களும் அமெரிக்க செய்தி நிறுவனங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

Related Posts