தண்ணீர் தாங்கியின் அருகிலிருந்து நஞ்சுப் போத்தல் மீட்பு

யாழ்ப்பாணம், ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையின் தண்ணீர் தாங்கியினுள் நஞ்சு கலந்தமையால் அதனை பருகிய 26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் மூவர், சுயநினைவை இழந்துள்ளனர் என்றும் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

மேற்படி தண்ணீர் தாங்கியின் உள்ளிருந்து நஞ்சுப் போத்தலொன்று மீட்கப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

Related Posts