தடையை மீறி யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!!

தடைகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு மாணவர்கள் உணர்வூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.

மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இந்த தடையை பல்கலைக்கழக பீடாதிபதிகள் கூடி எடுத்த முடிவுக்கு அமைய பொறுப்பு வாய்ந்த அதிகாரி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

Related Posts