தடையையும் மீறிய ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிசார்

இஸ்ரேலுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மாளிகாவத்தையிலிருந்து கோட்டையை நோக்கி ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

colombo-prot

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

புறக்கோட்டை ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டுமே நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மாளிகாவத்தையிலிருந்து பஞ்சிக்காவத்தை சந்தி நோக்கி நகர்ந்து சென்றது.

மாளிகாவத்தையில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் அமைதியான முறையில் அப் பகுதியில் எழுச்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது.

Related Posts