தடுமாற்றத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 251 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

Rangana Herath

முதல் இன்னிங்ஸில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 484 ஓட்டங்கள் பெற்று பலமான நிலையில் உள்ளது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக பிராவோ 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 68 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை கைப்பற்றுயுள்ளார்.

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடும் மேற்கிந்திய தீவுகள் நேற்றய நாள் முடிவில் 67 ஒட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 186 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 151 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts