தடுப்பூசியை பெற்றுகொள்ள மாணவர்களை தயார் செய்யவும் – பெற்றோருக்கு அறிவுறுத்தல்

பாடசாலை செல்லும் மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது.

குறிப்பாக தடுப்பூசியை செலுத்துவதற்கான காலக்கெடு இறுதி செய்யப்படாத நிலையில் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் முறையான உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்காது என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதற்குரிய திகதிகள் மற்றும் இடங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க ஜனாதிபதி நேற்று பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts