தடுப்பில் இரசாயன உணவும் ஊசியும் : புலி­களின் முன்னாள் போராளி சாட்­சியம்

தடுப்பில் இருக்கும் போது எமக்கு இர­சா­யன உணவு தந்­தார்கள். ஊசி போட்­டார்கள். ஊசி போட்டவுடன் ஒரு போராளி உயி­ரி­ழந்தார். தடுப்பில் வைத்து எமக்கு ஏதோ செய்­துள்­ளார்கள். இவ்­வா­றாக விடு­தலைப் புலி­களின் முன்னாள் போராளி ஒருவர் தெரி­வித்துள்ளார்.

நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்பில் மக்கள் கருத்­த­றியும் அமர்வு நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை ஒட்­டு­சுட்­டானில் நடை­பெற்­றது. அந்த அமர்வில் கலந்து கொண்டு நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்பில் மக்கள் கருத்­த­றியும் குழு­வி­ன­ரி­டமே குறித்த போராளி அவ்­வாறு தெரி­வித்தார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில்,

இறுதி யுத்­தத்தின் போது சர­ண­டைந்­த­வர்கள் வெள்­ளைக்­கொ­டி­யுடன் போன­தற்­கான ஆதாரங்கள் நிறைய இணை­யங்­களில் வெளி­வந்­துள்­ளன. அதற்­கான பல சாட்­சி­யங்­களும் இருக்­கின்­றன. அவர்கள் பயத்தில் கதைக்­கின்­றார்கள் இல்லை. கதைக்க போனால் அவர்­க­ளுக்கு பாது­காப்பு இல்லை. எங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் நீதியை பெற்று தரப்போவ­தில்லை. தமிழ் அர­சியல் கட்­சிகள் கூட தற்­போது “பல்டி” அடிக்­கின்­றன. எனவே கண்­டிப்பாக சர்­வ­தே­சத்தில் இருந்து நடு­நி­லை­யான நாடுகள் தான் எங்­க­ளுக்கு நீதியை வழங்க வேண்டும்.

யுத்த தர்மம் என்ற ஒன்று இருக்­கின்­றது. இலங்கை அர­சாங்கம் இரா­ணு­வத்­திற்கு யுத்த தர்மம் என்றால் என்ன என்­ப­தனை போதிக்க வேண்டும். சர­ண­டைந்­த­வர்­களை சுடு­வது நியாயம் அல்ல. ஏனெனில் அவர்கள் நிரா­யுத பாணி­யாக தான் சர­ண­டைந்­த­வர்கள். நான் ஒரு முன்னாள் போராளி. தடுப்­பால வந்த பின்னர் யுத்த நினைப்பை விட்டு ஒதுங்கி இருக்­கின்றோம்.

நாங்கள் தடுப்பில் இருக்கும் போது எமக்கு இரசா­யன உணவை தந்து இருக்­கின்­றார்கள். நான் தடுப்­புக்கு போக முன்னர் நூறு கிலோ தூக்கிக் கொண்டு கிலோ மீற்றர் கணக்­குக்கு ஓடுவேன். தடுப்­பால வந்த பிறகு ஒரு பொருளைக் கூட தூக்க முடி­ய­வில்லை. அத்­துடன் கண் பார்­வையும் குறை­யுது. இதில் இருந்து எங்­க­ளுக்கு ஏதோ நடந்து இருக்­கின்­றது என்­பது எமக்கு தெளி­வாக தெரி­கின்­றது.

தடுப்­பில நாங்கள் இருந்த போது எமக்கு எல்லாம் தடுப்பு மருந்து ஏற்­றி­ன­ார்கள். ஏதோ ஒரு ஊசி போட்­டார்கள். எது என்ன தடுப்­புக்­கான ஊசி என எமக்கு தெரி­யாது. அந்த தடுப்பு ஊசி போட்ட போராளி ஒருவர் ஊசி போட்ட அன்­றைய தினம் இரவே உயி­ரி­ழந்தார்.

அத்­துடன் தடுப்பில் இருந்து வெளியேறிய 12 ஆயிரம் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டாலே மீண்டும் போராட்டம் துளிர்க்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts