தடம் மாறும் இளம் சந்ததியினரை நல்வழிப்படுத்த வேண்டும்

தடம் மாறிச் செல்லும் இளம் சந்ததியினரை நல்வழிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு ஆசிரியர்களினதும் கடமையென வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

அத்துடன் வடமாகாணத்தில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வி துறையையும் வளர்த்தெடுக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

வடமாகாண பட்டதாரிகள் 549 பேருக்கும் 474 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனம் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆசிரியர் சேவையில் பட்டதாரிகளையும் ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களையும் வடமாகாண ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ். இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது 549 பட்டதாரிகளுக்கும் 474 ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் வடமாகாணசபை அவைதலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts