தடகளத் தொடரில் யாழ். வலயம் சம்பியனானது

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 10ஆவது தடகளத் தொடரில், யாழ். கல்வி வலயம் சம்பியனானது.

யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான தடகளத் தொடர், நேற்று (திங்கட்கிழமை) நிறைவடைந்தது.

இதில் யாழ்ப்பாண கல்வி வலயம் மொத்தமாக 650 புள்ளிகளைப் பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. வெற்றிக்கிண்ணத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கிவைத்தார்.

அத்தோடு, மன்னார் கல்வி வலயம் 601 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும், வலிகாகம் கல்வி வலயம் 545 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டது.

வடமராட்சி கல்வி வலயம் 346 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும், வவுனியா தெற்கு கல்வி வலயம் 228 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts