‘தசரா’ விழாவில் ஜன நெரிசலில் சிக்கி குறைந்தது 32 பேர் பலி

இந்தியாவின் பீஹாரில் ஏற்பட்ட ஜனநெரிசல் சம்பவம் ஒன்றில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பீஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

patna_stempede-thasara-india

இந்துப் பண்டிகையான தசரா தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து பெரிய விழா ஒன்றில் கலந்து கொள்ள பொதுமக்கள் திரண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

இது குறித்த மேல் விவரங்கள் இன்னும் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த விழா நடந்த பகுதியிலிருந்து கூட்டத்தினர் கலைந்து செல்ல முயன்று கொண்டிருந்தபோது இந்த நெரிசல் ஏற்பட்டது போலத் தெரிகிறது.

Related Posts