தங்கச் சங்கிலிகளை அபகரிக்கும் மோட்டார் சைக்கிள் கும்பல்,அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!

robberyயாழ்ப்பாணத்தில் தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அபகரிக்கும் மோட்டார் சைக்கிள் கும்பல் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழில் தனிமையில் தங்க ஆபரணங்களை அணிந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் அவர்களை வழிமறித்து தங்கள் கையில் உள்ள கடதாசி ஒன்றைக் கொடுத்து இந்தக் கடதாசியில் இருக்கும் விலாசம் எங்கு இருக்கிறது என விசாரிப்பார்கள்.

அதன் பின்னர் அப் பெண் குனிந்து இந்த கடதாசியிலுள்ள விலாசத்தை அவதானிக்கும் போது அப் பெண் அணிந்து இருக்கும் தங்கச் சங்கிலிகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகின்றனர்.

குறித்த மோட்டர் சைக்கிள் நபர்கள் தலைக் கவசம் அணிந்து இருப்பதுடன் கைகளில் கத்தி போன்ற கூரிய ஆயதங்களையும் தம் வசம் வைத்திருப்பதாக யாழ்.குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts