எதிர்வரும் 26ஆம் திகதி, சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமாகும். அத்தினத்தை முன்னிட்டு சட்டவிரோமாக மதுபானம் விற்போரையும் போதைப்பொருட்களை விற்போரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் பொலிஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவு இரவு-பகலாக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளது.
சட்டவிரோமாக மதுபானம் விற்போர் மற்றும் போதைப்பொருட்களை விற்போர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்:
011 -3024825
011 -3024826
070- 3117117
070-3118118
070-3119119
மின்னஞ்சல்: dir.crimes@police.lk
FAX: 011-2333496