தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளின் விபரங்களை கோரி கடிதம்

அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் வழக்கு தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளின் விபரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரிக்கை கடிதமொன்றை கையளித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விபரங்களை வழங்குமாறு கோரி குறித்த அமைப்பின் பிரதிநிதிகள் அமைச்சின் இணைப்புச் செயலாளரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Related Posts