ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவின் எதிரொலி: டெக்சாஸில் மசூதி தீக்கிரை

ஏழு இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்கள் அமெரிக்காவிற்குள் வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடைவிதித்து சில மணிநேரத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாநிலம் விக்டோரியா நகர மசூதி நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு 2 மணி அளவில் இவ்வாறு இனம்தெரியாதோர் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மசூதியில் இருந்து புகை வெளிவருவதை அவதானித்த ஒருவர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர நான்கு மணிநேரம் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் மசூதி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மசூதியில் தீ பிடித்தால் எச்சரிக்கும் எச்சரிக்கை மணியை முன்னரே திட்டமிட்டு செயல் இழக்க வைத்துள்ளதாகவும், கதவை திறந்து வைத்ததாகவும் மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொலிஸார் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சுற்றுலா பயணிகளாக இருந்தாலும், குடியேற்றவாசிகளாக இருந்தாலும் இஸ்லாமிய நாடுகளான ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய நாடுகளில் இருந்து வர அமெரிக்காவுக்கு தடை விதிக்கும் வகையிலான ஒப்பந்தமொன்றில் டொனால்ட் ட்ரம்ப் கைசாத்திட்டமை குறுpப்பிடத்தக்கது.

Related Posts