ட்ரம்பினால் அமெரிக்க விமான நிலையத்தில் இலங்கையர்களும் தடுத்து வைப்பு

அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தடை உத்தரவால் இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த 71 பேரையும் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தடுத்து வைத்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த 71 பேரும் இலங்கை, பாக்கிஸ்தான், பிரான்ஸ், அல்ஜீரியா, ஜோர்டான், கட்டார், செனகல், சுவிட்ஸர்லாந்து மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்பின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகெங்கிலும் பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றதுடன், உலகத்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts