ஐபிஎல் டி20 தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே, ராஜ்கோட் அணிகளுக்கான முதல் கட்ட வீரர்கள் தேர்வு மும்பையில் நடைபெற்றது. இதில் முதல் வாய்ப்பு புனே அணிக்கு வழங்கப்பட்டது.
இதன்படி முதல் ஆளாக டோனியை ரூ.12.5 கோடிக்கு புனே அணி வாங்கியது. அஜிங்யா ரகானேவை புனே அணி வாங்கியது. மேலும் ராஜ்கோட் அணி சுரேஷ் ரெய்னா மற்றும் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடாஜாவை ராஜ்கோட் அணி வாங்கியது.
ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் 2016 மற்றும் 2017ம் ஆண்டு சீசனில் விளையாடுவதற்காக இரண்டு புதிய அணிகளை சேர்க்க கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது.
இதன்படி டெண்டர் விடப்பட்டதில் புனே நகரை அடிப்படையாகக் கொண்ட அணியை தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்காவின் நியூ ரைசிங் நிறுவனம் ரூ.16 கோடிக்கும், இன்டெக்ஸ் மொபைல் நிறுவனம் ராஜ்கோட் அணியை ரூ.20 கோடிக்கும் ஏலம் எடுத்தன.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை சேர்ந்த வீரர்கள் புதிய அணிகளுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இரு அணிகளும் தலா 5 வீரர்களை நேரடியாகத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான ஏலம் பிப். 6ம் தேதி பெங்களூருவில் நடைபெறும்.
புனே அணி வீரர்கள்
மகேந்திரசிங் டோனி – ரூ.12.5 கோடி
அஜிங்யா ரகானே – ரூ.9.5 கோடி
அஸ்வின் – ரூ.7.5 கோடி
ஸ்டீவன் ஸ்மித் – ரூ.5.5 கோடி
டூ பிளஸ்சிஸ் – ரூ.4 கோடி
ராஜ்கோட் அணி வீரர்கள்
சுரேஷ் ரெய்னா – ரூ.12.5 கோடி
ரவிந்திர ஜடேஜா – ரூ.9.5 கோடி
பிரண்டென் மெக்கல்லம் – ரூ.7.5 கோடி
ஜேம்ஸ் பால்க்னர் – ரூ.5.5 கோடி
வேய்ன் பிராவோ – ரூ.4 கோடி