டோணியை ஸ்கூட்டியில் விரட்டிய பெண்!

ஹம்மர் காரில் விர்ரென பறந்த இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை, ஸ்கூட்டியிலேயே விரட்டி சென்று பிடித்து போட்டோ எடுத்து அசத்தியுள்ளார் டீன் ஏஜ் பெண் ஒருவர். அந்த போட்டோ இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.

dhoni-fan-edited

நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி, டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்க சென்ற டோணி, ஏர்போர்ட்டிலிருந்து ஹம்மர் காரில் மைதானம் சென்றார். பஸ்சில் சென்ற நியூசிலாந்து வீரர்கள் வாயை பிளந்தபடி அதை ரசித்து பார்த்தனர். அந்த போட்டோ ஏற்கனவே வைரலாகிவிட்டது.

doni-car

இந்நிலையில், போட்டி முடிந்து, விசாகபட்டினம் செல்வதற்காக, ஹம்மரில் ராஞ்சி ஏர்போர்ட் சென்ற டோணியை சாலையில் வைத்து பார்த்த கல்லூரி மாணவி தனது ஸ்கூட்டரில் விரட்டிச் சென்று, ஏர்போர்ட்டில் வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க டோணியிடம் கெஞ்சியுள்ளார். அதற்கு மறுக்காமல் டோணியும் போஸ் கொடுத்துள்ளார்.

Related Posts