டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 323.03 ஆகவும் விற்பனை விலை 336.16 ஆகவும் பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 329 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி 24ஆம் திகதி டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 362.66 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts