நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று (புதன்கிழமை) சந்தித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களையும் ஜனாதிபதி பதிவேற்றியுள்ளார்.
நானும் எனது மனைவி ஜயந்தியும், அமெரிக்க ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் நியூயோர்க்கில் இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்து புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.