டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் திடீரென ஓய்வை அறிவித்தார் டோனி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணித்தலைவர் டோனி திடீரென ஓய்வை அறிவித்தார்.

ms-dhoni

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி சமன் செய்தது.

இதையடுத்து தனது ஓய்வை அறிவித்தார் இந்திய அணித்தலைவர் டோனி. ஒருநாள், ருவென்ரி-20 போட்டிகளில் கவனம் செலுத்தவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றார்.

சிறந்த அணித் தலைவர்களுள் ஒருவரான அவரின் முடிவைத் தாம் மதிப்பதாக இந்தியக் கிரிக்கெட் சபை அறிவித்தது. 90 போட்டிகளில் பங்கேற்ற டோனி 6 சதங்கள், 33 அரைச் சதங்களுடன் 4,876 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

Related Posts