டெல்லியில் கற்பழிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு போராட்டம்: சோனியா, கெஜ்ரிவால் நேரில் ஆறுதல்

தென்கிழக்கு டெல்லி புறநகர் பகுதியில் உள்ளது புல் பிரகலாத்பூர். இந்த ஊரை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமி உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார்.

கடந்த 17–ந் தேதி சிறுமி காணாமல் போய் விட்டார். இந்த நிலையில் மறுநாள் அதிகாலையில் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நினைவிழந்த நிலையில் உதவி கேட்டு கதறிக்கொண்டு இருந்தார்.

தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சிறுமியை சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் காயங்கள் இருந்தன. மருத்துவ பரிசோதனையில் சிறுமி மர்ம கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். சிறுமியால் பேசமுடியாமல் அபாய கட்டத்தில் இருப்பதால் வாக்குமூலம் பெறமுடியவில்லை. சிறுமியை பிழைக்கவைக்க டாக்டர்கள் போராடி வருகிறார்கள். சிறுமிக்கு ஆபரேசனும் செய்யப்படுகிறது.

சிறுமி மாயமானது பற்றி உள்ளூர் போலீசுக்கு தகவல் தெரிவில்லை. இதையடுத்து போலீசின் கவனத்துக்கு வராதது ஏன் என்று கேட்டு தேசிய மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று சிறுமியை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

Related Posts