டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
டென்மார்க்கில் வேலைவாய்ப்பு தொடர்பான முகநூல் பக்கத்தில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த போலி விளம்பரத்தில், நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள், செவிலியர்கள், பேக்கிங் தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாவலர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் வினவிய போது, இது முழுக்க முழுக்க மோசடியான நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.