டெண்டுல்கர்-வோர்ன் காட்சி இருபது-20 போட்டிகள் நவம்பரில் ஆரம்பம்

அமெரிக்காவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மூன்று இருபது-20 காட்சிப் போட்டிகள் கொண்ட தொடருக்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வோர்னும் எதிரெதிர் அணிகளுக்கு தலைமை தாங்கவுள்ளனர்.

warne_tendul-sachhen

கிரிக்கெட் ஓல்-ஸ்டார்ஸ் சீரிஸ் 2015 என இந்தத் தொடர் அழைக்கப்படவுள்ளது.

இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் பேஸ்போல் அரங்குகளிலேயே இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டி நவம்பர் 7ஆம் திகதி நியூயோர்க் சிட்டி பீல்டிலும், இரண்டாவது போட்டி நவம்பர் 11ஆம் திங்கதி ஹௌஸ்டன் மினிட் மெயிட் பார்க்கிலும், இறுதிப்போட்டி லொஸ் ஏஞ்செல்சின் டொட்கர் அரங்கிலும் இடம்பெறவுள்ளது.

முதலிரண்டு போட்டிகளும் பகற் போட்டிகளாக இடம்பெறவுள்ளதோடு, மூன்றாவது போட்டி இரவுப்போட்டியாக இடம்பெறவுள்ளது.

இந்தத் தொடரில் குமார் சங்கக்கார, முத்தையா முரளி, சௌரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஸ்மன், அஜித் அகார்கர், வசிம் அக்ரம், ஷோய்ப் அக்தர், சக்லைன் முஷ்டாக், மொயின் கான், ரிக்கி பொண்டிங், கிளென் மெக்ராத், மத்தியு ஹெய்டன், பிராட் ஹடின், ஜக்குஸ் கலிஸ், ஷோன் பொலொக், லான்ஸ் குளூஸ்னர், ஜொன்டி ரோட்ஸ், அலன் டொனால்ட், பிரயன் லாரா, கொட்னி வோல்ஷ், கேர்ட்லி அம்புரோஸ், கிரேமி ஸ்வான், மைக்கல் வோகன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

தவிர அனில் கும்ளே, அன்டி பிளவர், சனத் ஜெயசூர்யா, ஷாகித் அப்ரிடி, வக்கார் யூனிஸ், அன்ரூ பிளின்டொஃப், அடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ ஆகியோரும் தொடரில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராதன் 26 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மகேல ஜெயவர்த்தன, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளதோடு, வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அங்கு கடமையாற்றவுள்ளார்.

Related Posts