டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை பதிவு செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள மருந்து தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுகிறது.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது தேசிய ஒளடதங்கள் அதிகார சபையின் தலைவர் டொக்டர் ஹசித டி சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த மருந்து வேறு நாடுகளில் பயன்படுத்துவது தொடர்பான விபரங்களும் விரிவாக ஆய்வு செய்யப்படவுள்ளன.
இது தொடர்பாக வெளிநாட்டு விசேட மருத்துவ நிபுணர்கள் இருவரின் உதவியும் நாடப்படவுள்ளது.
பிரான்ஸ் நிறுவனம ஒன்று உற்பத்தி செய்யும் இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலமாக டெங்கு நோயை முற்றாக கட்டுப்படுத்துவதற்கோ அல்லது குறைத்துக் கொள்வதற்கோ முடியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த மருந்தை பயன்படுத்திய நோயாளர்கள் சிலர் அசாதாரண நிலைக்கு சென்றிருப்பதும் இடம்பெற்றுள்ளது.
எனவே இது தொடர்பாக விரிவான ஆய்வுகள் நிறைவடையும் வரை மருந்து பதிவு செய்யாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் ஹசித டீ சில்வா மேலும் தொவித்தார்.