டெங்கு நுளம்பு பெருகும் வகையில் குடியிருப்பை வைத்திருந்தார் என யாழ். மாநகர சபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுசூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த வியாழக்கிழமை (20) சுகாதார துறையினர், பொலிஸ் உத்தியோகத்தர் சகிதம் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கலிமா வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த மாநகர சபை உறுப்பினரான எம்.எம்.எம் நிபாஹிரின் வீட்டுக்கு அந்த அதிகாரிகள் சென்றிருந்த நிலையில், டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததை கண்டித்திருந்தனர்.

ஆனால் அதிகாரிகளை மாநகர சபை உறுப்பினர் கடமையை செய்யவிடாது தடுக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில் அதிகாரிகளுடன் வந்த பொலிஸ் உத்தியொகத்தர்கள் உடனடியாக தலையிட்டு மாநகர சபை உறுப்பினரை எச்சரித்ததுடன் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாநகர சபை உறுப்பினர் கடந்த யாழ்ப்பாண மாநகர சபை தேர்தலில் 10 ஆம் வட்டார வேட்பாளராக போட்டியிடும் போது புத்தளத்தில் நிரந்திர வதிவிடத்தை கொண்டிருந்தார் என்கின்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டள்ளது.

Related Posts