டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

maleriya-mosquto-denkuநுளம்பு ஒழிப்புக்கான விசேட தேசிய வாரமொன்றைப் பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான விசேட தேசிய வாரமாகப் பிரகடனப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

வருடா வருடம் ஜூன், ஜுலை மாதங்களில் இந்நாட்டில் டெங்கு நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவது வழமை. இதனைக் கருத்தில் கொண்டே இவ்வாரத்தைப் பிரகடனப்படுத்தி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். சுகாதாரம், கல்வி, அரச பாதுகாப்பு, உள்ளூராட்சி, மாகாண சபைகள், சுற்றாடல், தகவல் ஊடகம், பொது நிர்வாகம் ஆகிய அமைச்சுக்களின் ஒத்துழைப்போடு இத்தேசிய வேலைத் திட்டம் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படும் எனவும் அவ்வதிகாரி கூறினார்.

Related Posts