டெங்கு ஒழிப்பு தொடர்பாக யாழில் விசேட கலந்துரையாடல்!

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 13.10.2017 (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலணி, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்கத் தகவல் திணைக்களம், வட.மாகாணத்தில் பரவியுள்ள டெங்கு நோயினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி கடந்த மாதத்தில் வட.மாகாணத்திலேயே டெங்குநோய் அதிகம் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts