டெங்குவின் கோரப் பிடியில் சிக்கி சென்னையில் உயிர் துறந்தார் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா (வயது 13). பிரசன்னாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அது என்ன நோய் என்று ஆரம்பத்தில் கண்டறிய முடியவில்லை. பின்னர்தான் டெங்கு காய்ச்சலால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆனால் அதற்குள் உடல்நிலை மோசமாகி, கோமா நிலைக்குப் போய்விட்டார். சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் மகன் அருகிலேயே இருந்து கவனித்து வந்தார் நடிகர் விவேக்.
அவர் பிழைத்து வர ஏராளமான பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. ஆனால் எதுவும் பலனின்று மிக இளம் வயதில் உயிரிழந்தான் பிரசன்னா.
பல கோடி மக்களை தன் நகைச்சுவையால் மகிழ்வித்த இணையில்லா கலைஞனான விவேக்கை, மகனின் மரணம் ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.