டெங்கு நோய் தொடர்பில்இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
டெங்குத் தொற்றால் பல்கலைக்கழக மாணவனொருவன் இறந்ததைதையடுத்து யாழ்.பல்கலைக்கழத்தின் விஞ்ஞான பீடம் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து இது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
டெங்கு நோய் தொடர்பில் இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை.
விஜயரட்ணம் விந்துசன் என்ற இளைஞன் இருதய அழற்சி நோயால் உயிரிழந்துள்ளதாகவும் இருப்பினும் அவரது இறப்பபுத் தொடர்பான மேலதிக பரிசோதனைக்காக அரவரது உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 2014 ஆம் ஆண்டு 1039 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 2015 1309 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 2016 ஆம் ஆண்டு 670 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் இவ்வாண்டு ஆரம்பம் முதல் 21 ஆம் திகதி 8 ஆம் மாதம் வரை 1702 பேர் டெங்கு நோய்த்தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலையில் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.e-jaffna.com/archives/85665