டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் சூர்யா

தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் டுவிட்டர் என்ற சமூக இணையதளத்தில் தங்களது பெயரில் தனியாக பக்கம் ஒன்றை தொடங்கி வைத்துக் கொண்டு, அதில் தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றியும், வெளிநாடுகளில் தங்களது விடுமுறை நாளை ஜாலியாக கொண்டாடியது என அத்தனை விஷயங்களையும் ரசிகர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்கின்றனர்.

soorya

சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார் வரை டுவிட்டரை கலக்கி வரும் நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் இந்த டுவிட்டரில் இணைந்துள்ளார். https://twitter.com/Suriya_offl என்ற பெயரில் அந்த டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதுவே சூர்யாவின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் தளம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த டுவிட்டர் கணக்கை சூர்யா தொடங்கி சில நிமிடங்களிலேயே 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவரது டுவிட்டரை தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டுவிட்டர் பக்கத்தில் சூர்யா பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். ரொம்ப நாளாக டுவிட்டருக்கு வரவேண்டும் என எண்ணி இருந்தேன். இன்று வந்தாச்சு. ஏன்? எதுக்குன்னு, கேள்வியெல்லாம் கேட்டீங்கன்னா, என்னால நினைக்க முடிந்ததைவிட அதிகமாக அன்பு காட்டுகிறீர்கள். அதுக்காகத்தான். உங்களுடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்று பேசியுள்ளார்.

டுவிட்டரில் சூர்யா இணைந்ததை வைத்து டுவிட்டர் ரசிகர்கள் வெல்கம் சூர்யா டு டுவிட்டர் (#WelcomeSuriyaToTwitter) என்ற புதிய டிரெண்டை ஏற்படுத்தி, டுவிட்டரில் சூர்யாவை பிரபலமாக்கி வருகின்றனர்.

சூர்யா பெயரில் ஏற்கெனவே போலியான டுவிட்டர் கணக்கு தொடங்கி, அதன்மூலம் சூர்யா பற்றி தவறான கருத்துக்களை வெளியிடுவதாக சூர்யா தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts