இறக்குமதி தீர்வை அதிகரிப்பின் காரணமாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் இரண்டு எரிதிரவங்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி எக்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 மற்றும் எக்ட்ரா மைல் ஆகிய இரண்டு வகையான டீசல்களின் விலைகளும் தலா இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ‘எக்ற்ட்ரா ப்ரீமியம் யூரோ 3’ டீசலின் ஒரு லீற்றருக்கான விலை 123 ரூபாவாகவும், ‘எக்ஸ்ட்ரா மைல்’ டீசலின் ஒரு லீற்றருக்கான விலை 99 ரூபாவாகவும் நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் லங்கா பெற்றோல் 92, எக்ஸ்ட்ராப் பிரிமீயம் 95, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் லங்கா சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.